சுவிஸ் தமிழர் இல்லம் சப்கவுசன் கிளையின் நிதி அனுசரணையில் முதற்கட்டமாக தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்றுநோய் காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் நீனாக்கேணி, சம்பூர், செல்வநாயகபுரம் கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், உழைப்பாளர்களை இழந்த குடும்பங்கள், வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் என இதுவரை உதவிகள் கிடைக்காத இருநூற்றி தொண்ணூறு (290) குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.